நடிகை குஷ்பு:
“நாம் எல்லாரும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த லெஜண்டரி இயக்குநர், நம்முடைய அன்பிற்குரிய பாரதிராஜா அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
அவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு கருமேகம் சூழ்ந்தது போன்ற பேரிழப்பாகும். அவர் எடுத்த படங்கள் என்றும் அழியாத மைல்கற்கள். இன்னும் சொல்லப்போனால் அவைதாம் சினிமா உலகிற்கான நிஜமான பாடம்.
ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பர்யத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
அவர் எப்போதும் என்னிடம், ‘நாம ரெண்டு சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம் பண்ணலாம்’ என்று கூறுவார். அது இனி நிறைவேறாத ஒரு கனவாகவே எஞ்சியிருக்கும். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் சார்.
அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.
ஓம் சாந்தி”.

சென்னையில் இன்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த இரங்கல்களின் பதிவுகள் இதோ…