Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! – யார் இந்த கவி?

Spread the love

பிக்பாஸ் சீசன் 10-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் உள்ளே செல்ல இருக்கிறார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை பிளாக் பாண்டி, மணிவண்ணன், சாவின்யா, ஜாவித் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

தொடர்ந்து இந்த வாரம் நடிகை லக்ஷ்மி பிரியாவும் ஆனந்தியும் வெளியேறுகின்றனர்.

ஆனந்தி பிக்பாஸ் தொடங்கிய ஒரு வாரம் கழித்து நிகழ்ச்சிக்குள் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவரது என்ட்ரியின் போது வைல்டு கார்டு என்ட்ரி எனக் குறிப்பிடப்படவில்லை.

இந்தச் சூழலில் புதிய ஒரு போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் செல்வது உறுதியாகியுள்ளது.

நாளையோ அல்லது நாளை மறுநாளோ நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கும் அந்தப் போட்டியாளர் பெயர் கவி.

கவி குறித்து விசாரித்தபோது,

’சென்னையைச் சேர்ந்தவர்தான். மாடலிங் செய்து கொண்டிருப்பவர்’ என்கிறார்கள்.

கொஞ்சம் சாய் பல்லவி சாயலில் இருக்கும் கவி, விரைவில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறாராம். அது ரெசார்ட், பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் டைப்பில் ஒரு ஃபீல்குட் கதை என்கிறார்கள். சீரிஸ் ஏரியாவுக்கு புது வரவான இவர் பக்கம் ரசிகர்கள் சாய்வார்களா என்பதைப் பார்க்க பிக்பாஸ் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆமாம், பிக்பாஸ் முடிவடைந்ததும் அந்த சீரிஸ் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *