Bollywood actress Deepika Padukone is pregnant again.-பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பம்

Spread the love

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதோடு படப்பிடிப்பில் 8 மணி நேரம் தான் இருப்பேன் என்று தெரிவித்தார். இதனால் தீபிகா படுகோனே சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தீபிகா படுகோனேயும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து இந்த நல்ல செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதில் கர்ப்ப சோதனை கிட்டை கையில் வைத்திருப்பது போன்ற தங்கள் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்ததும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *