'Confident ah இருங்க, வெற்றி நிச்சயம்னு குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா முதல்வரே?' – எடப்பாடி காட்டம்

Spread the love

“தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர் விஜய்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை விமர்சித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

நகை
நகை

மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை.. காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை..

நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..

விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.

திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..

நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.

இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி,

மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?

Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே!

இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன..

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல்

முதல்வர் அவர்களே!

உங்கள் “Action” எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?

எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு,

உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *