நம்மிடம் பேசிய உதயநிதி ஆதரவாளர்கள், “மிசா விவகாரத்தைச் சட்டமன்றத்தில் பேசி வசமாகச் சிக்கினார் முதல்வர் விஜய். அந்த நேரத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவும் தீயாகப் பரவி த.வெ.க-வைத் திணறடித்தது. விஜய்க்கு தலைவரின் வீடியோ எதிர்வினையே போதும் , அந்த வீடியோவை மில்லியன் கணக்கில் பரப்பி த.வெ.க டார்கெட் செய்யலாம் என்பதுதான் தலைமையின் ப்ளான். ஆனால், ‘முதல்வருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.

முதலில், ‘அதெல்லாம் வேண்டாம்..’ என்பதுதான் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசி, த.வெ.க எதிர்ப்பு உணர்வை மழுங்கடித்து திசைதிருப்பிவிட்டார்கள் சீனியர்கள். இதனால் ரொம்பவே கொதித்துப் போய்விட்டார் உதயநிதி. ‘இந்த சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது’ என கொதித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முடிவெடுத்தால் ‘நாஙகள் தலைவரிடம் பேசிக் கொள்கிறோம்’ என ஓவர் டேக் செய்துவிடுகிறார்கள். அதுவே பின்நாட்களில் ஈகோ மோதலாக மாறிவிடுகிறது” என்றனர்.