தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவிற்குச் செல்கின்றன என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
இப்போது இதற்குத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தைச் (Guidance Tamil Nadu) சேர்ந்த 15 ஊழியர்கள் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்களை ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்துத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, 2026 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் யாரும் மொத்தமாக ராஜினாமா செய்யவில்லை.
எந்தவொரு நிறுவனத்திலும் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது என்பது இயல்பான ஒன்றே.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம் மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பச் சூழ்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே ஊழியர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர்.