I’m Game: “அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை”- கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான் | I’m Game: “Beauty is sometimes a slight hindrance to her talent” – Dulquer Salmaan on kayadu Lohar |

Spread the love

மிஷ்கின் பற்றி…

இயக்குநர் மிஷ்கின் களத்தில் இறங்கிவிட்டாலே அங்கிருக்கும் சூழலே மாறிவிடும். அவர் அங்குதான் இருக்கிறார் என்பதை அனைவராலும் உணர முடியும். அந்த அளவிற்குத் தன்னுடன் ஒரு தனி ஆற்றலைக் கொண்டுவரக்கூடியவர். இந்தப் படத்தில் அவருக்கு மிகச் சுவாரசியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தனது உடல்மொழியையும், முகபாவனைகளையும் மிக சிறப்பாகப் பயன்படுத்தி, இந்த சவாலான கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். திரையில் அவரது இந்த நடிப்புப் பங்களிப்பைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறது.

காயடு லோஹர் பற்றி..

நடிகை காயடு லோஹர் குறித்து இயக்குநர் மிஷ்கின் சார் குறிப்பிடும்போது, “அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவரைப் என் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால், அந்த அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடையாகத் தெரிந்தாலும், அவர் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர்.

இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழ்ப் பெண்ணாகவோ, தெலுங்கு அல்லது மலையாளப் பெண்ணாகவோ மிக இயல்பாகப் பொருந்திவிடக்கூடிய அபார ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உள்ளூர்த் தன்மையே அவரது மிகப்பெரிய பலம். இந்தப் படத்திற்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *