IPL: “இரண்டு அணிகளை தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!”- வைபவ் சூர்யவன்ஷி| Vaibhav Sooryavanshi On IPL Auction

Spread the love

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யவன்ஷி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இரண்டே அணிகள் தான் தன்னை ஏலத்தில் எடுக்க முன்வந்தன என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனக்காக இரண்டு அணிகள் மட்டுமே ஏலம் கேட்டன, நான் நன்றாகத்தான் விளையாடுகிறேன், என்னுடைய ட்ரையல்ஸ்களிலும் நான் சிறப்பான பங்களிப்பைத்தான் கொடுத்திருந்தேன்.

இருப்பினும் மற்ற அணிகள் ஏன் என்னை ஏலம் கேட்கவில்லை என்று எனக்கு தோன்றி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *