k.p.vidhyatharan 2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு ஜன்ம குரு சாதகமா? பாதகமா| 2026: k.p.vidhyatharan gurupeyarchi kadaga Cancer Rasi palangal

Spread the love

உங்கள் ராசிக்குள்ளேயே (திருக்கணிதப்படி) வரும் ஜூன் -2 முதல் அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான். ‘ஜன்ம குருவாயிற்றே…’ என்று பதற்றம் அடையாதீர்கள். குரு பகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதகமா கவே இருக்கும்.

1. பூர்விகச் சொத்துப் பிரச்னைக்கு இப்போது தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

2. பிறரிடம் கொடுத்து ஏமாந்த பணம் கைக்கு வரும். பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். யாருக்காகவும், எதற்காகவும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.

3. ஜன்ம குரு என்பதால், வீட்டில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். தாய்க்கும், தாரத்திற்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தவிப்பீர்கள். மனதுக்குள் சலிப்பு, சோர்வு, முன்கோபம் வந்து நீங்கும்.

4. உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டுச் செயலாற்றினால், வீண் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

5. உங்களின் சஷ்டம – பாக்யாதிபதியான குருபகவான், தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

2026 புத்தாண்டு கடக ராசி  பலன்கள்

2026 புத்தாண்டு கடக ராசி பலன்கள்

6. சப்தம – அஷ்டமாதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வதால், குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போகவும். கணவன் – மனைவிக்குள் காரசாரமான விவாதங்கள் வரும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள்.

7. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் இல்லையென வருந்திய தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பூர்விகச் சொத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு வாங்கும் அமைப்பு உண்டு.

8. குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடைக்கும் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். வீட்டில் தாமதமாகி வந்த சுபநிகழ்ச்சிகள் எல்லாம் இனி கோலாகலமாக நடக்கும்.

9. ராசிக்குப் பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

10. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். சந்தை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். சிலர், தங்களின் கடையை – தொழில் ஸ்தானத்தை வசதிகள் இல்லாத இடத்திலிருந்து நல்ல வசதியான இடத்திற்கு மாற்றுவார்கள். புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம்.

11. உத்தியோகத்தில் நீண்டநாளாக எதிர்பாத்த பதவி, சம்பளம் உயர்வு உண்டு. மேலதிகாரியிடம் வாக்குவாதம் வேண்டாம். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களைப் புறந்தள்ளுவது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *