‘MGR ரெபரன்ஸ்; அரசியல் அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னண!’- ‘ஜனநாயகன்’ யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது? |Vijay’s Jananayagan: MGR Reference, DMK Attack and the Politics of Hate Explained

Spread the love

கடந்த ஆட்சியில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணமும் அதிமுக ஆட்சியின் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை பிரதிபலிக்கும் காட்சிகளும் முக்கிய சீக்வென்ஸாக இடம்பிடித்திருக்கிறது.

இந்தியாவில் வெறிப்பரசியல் எப்படி தூண்டப்படுகிறது? சமூகவலைதளங்களின் வழி அதற்கான வேலைகளை அரசியல் கட்சியினர் எப்படி செய்கின்றனர் போன்றவையும் விரிவாக காட்டப்படுகின்றன. கோவில்களை வைத்து சில கட்சிகள் செய்யும் அரசியல்களையும் உள்குத்தாக சாடியிருக்கின்றனர். வெறுப்பரசியல் குறித்து விஜய்யே சில பன்ச்களையும் பேசி, இதையெல்லாம் நாம்தான் க்ளீன் செய்ய வேண்டுமென திரையிலிருந்தே தன் ரசிகர்களுக்கு அழைப்பும் விடுக்கிறார்.

TVK

இவ்வளவு அரசியல் நியாயம் பேசும் படத்தில் சில இடங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாகவும் இருந்தது. ‘தளபதி வெற்றி கொண்டான்’ பெயரை ‘TVK’ என சுருக்கி ஒரு தவெகவை நினைவுப்படுத்தியிருக்கிறார்கள். சென்சார் கை வைத்ததால் ‘TVK’ என பேசப்படும் இடங்களெல்லாம் மியூட் ஆகியிருக்கிறது. ‘ஜனநாயகன்’ என பெயர் வைத்ததற்காக ஜெயிலில் இந்திய ஜனநாயகம் எனும் புத்தகத்தோடு விஜய் அறிமுகமாவது, ஜனநாயகத்தையும் ஒண்ணும் பண்ண முடியாது. எங்க ஜனநாயகனையும் ஒண்ணும் பண்ண முடியாது என போஸ்டர் பன்ச்களுக்கு டஃப் கொடுக்கும் அரசியல் பன்ச்களெல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருந்தது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *