Minister Vignesh advises liquor consumers not to pay more than the mrp in tasmac – ’மதுப்பிரியர்கள் எம்.ஆர்.பி-யை விட எக்ஸ்டிரா பணம் தர வேண்டாம்’ – அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்!

Spread the love

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் 4800 கோடி ரூபாய் வரும். ஆனால் 50 சதவீத காலி பாட்டில்கள் தான் திரும்ப வருகின்றன. 50 சதவீத காலி பாட்டில்கள் வரவில்லை. அப்படியென்றால் 50 சதவீத பணம் யாருக்கு போயியுள்ளது? காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு வாங்கும் பத்து ரூபாயை, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாக சொல்கிறார்கள். விமர்சனங்கள் மீது எங்களுக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை.

ஒரு பாட்டில் விலை 140 ரூபாய் என்றால் கடந்த ஆட்சியில், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு பத்து ரூபாய், பார்ட்டி பண்டிற்கு பத்து ரூபாய் என கூடுதலாக 20 ரூபாய் சேர்த்து 160 ரூபாய் வாங்கினார்கள். அந்த பார்ட்டி பண்டை ஒழித்துவிட்டோம். கடந்த ஆட்சியில் 99 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப வந்ததாக கணக்கு காட்டியுள்ளார்கள். காலி பாட்டில் பெறுவதில் பெரிய லாபியே இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த பெரிய ஸ்கேம் பாட்டில் ஸ்கேம்தான்.

அமைச்சர் விக்னேஷ்

அமைச்சர் விக்னேஷ்

ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால் அந்தப் பணம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும். ஆனால், அந்த பணம் அரசிற்கு வர வேண்டும். எதற்காக இவ்வளவு போராட்டம் பண்ண வேண்டும்? நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் 10 லட்சம் மதுப்பிரியர்கள் ஒருநாள் குடிக்காமல், 150 ரூபாயை வீட்டிற்கு தந்திருப்பார்கள், அவர்களது குடும்பம் சந்தோஷமாக இருந்திருக்கும் என்பது எனக்கு மகிழ்ச்சி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *