World Bank’s First Digital Project: What Does India Gain?

Spread the love

எளிய தேவைகளுக்கான “Small AI’

பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் இல்லாமல், குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே குறைந்த செலவில் செயல்படும் சிறிய அளவிலான ‘Small AI’ தொழில்நுட்பங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விவசாயத்தில் பயிர் நோய்களைக் கண்டறிதல், கிராமப்புற சுகாதாரப் பணிகளுக்கு வழிகாட்டுதல், சிறு நிறுவனங்களின் கணக்கு மற்றும் சரக்கு மேலாண்மையை எளிமைப்படுத்துதல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு இது பெரிதும் பயன்படும்.

இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்

இந்தியாவின் UPI, India Stack மற்றும் MOSIP போன்ற முன்னுதாரணமான டிஜிட்டல் கட்டமைப்பு மாதிரிகள், பிற வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளாக மாறக்கூடும். இதன்மூலம் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசச் சந்தையில் புதிய கதவுகள் திறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு எனத் தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அதேவேளையில், இந்த டிஜிட்டல் வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டுமானால், குறைந்த விலை சாதனங்கள், டிஜிட்டல் பயிற்சிகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை அரசு முழுமையாக உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *