Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் – போராடி மீட்ட மீட்புக்குழு! | 24 bodies were recovered from a single building following floods in Nepal

Spread the love

கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் 12 பெண்கள், 11 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 24 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல உடல்கள் உறைந்துபோன சேற்றுக்குள் புதைந்திருந்ததால், மண்வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு கடினமாகப் போராடியே உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கட்டிடம் பகுராம் அவஸ்தி என்பவருக்குச் சொந்தமானது. அதன் தரைதளத்தில் “உத்தரகாயா மினி மார்ட்’ என்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்காடி இயங்கி வந்தது.

நேபாள் வெள்ளம்

நேபாள் வெள்ளம்

வெள்ளம் சூழ்ந்தபோது பாதுகாப்பு தேடி மக்கள் இந்த பெரிய கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்தனரா, அல்லது அங்காடிக்கு வந்த வாடிக்கையாளர்களா, அல்லது வெள்ளத்தின் பெருக்கெடுப்பில் அடித்து வரப்பட்டு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

நுவாகோட் காவல் கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி, “நாங்கள் ஆய்வு செய்ய முடிந்த பகுதிகளில் இருந்து மட்டுமே 24 உடல்களை மீட்டுள்ளோம். கட்டிடத்தின் சில பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை, அங்கேயும் சோதனைகள் தொடர வேண்டியுள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *