Nepal Flood:”என் மனைவி பாதுகாப்பாக இருக்காங்க.!”- நேபாளத்தில் சிக்கியிருக்கும் சிவரஞ்சனியின் கணவர் | My wife is safe Says the husband of Sivaranjani, who is stranded in Nepal

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர்.

அந்த வகையில் புனித யாத்திரை சென்ற திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவரது கணவர் முத்துநாதன் நேற்று (ஆக.26) பேட்டி அளித்திருந்தார்.

நேபாளம் வெள்ளப்பெருக்கு

நேபாளம் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி பாதுகாப்பாக இருப்பதாக முத்துநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

“என்னுடைய மனைவி சிவரஞ்சனி 23 ஆம் தேதி கைலாயம் புனித யாத்திரை மேற்கொண்டார். கும்பக்கோணத்தில் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலமாகச் சென்றார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் சென்றார். திபெத்திற்குச் செல்லும்போது இப்படி ஆகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *