99-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகளையும் ஆஸ்கர் அகாடமி கவனித்து வருகிறது.
இந்தாண்டு இந்தியாவின் சார்பாக “சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவிற்கு மராத்தியத் திரைப்படமான ‘கோந்தல்’ அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் நான்காவது மராத்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் தவாகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
எப்போதுமே ஒரு நாட்டின் சார்பாக ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவிற்கு ஒரேயொரு திரைப்படத்தை மட்டுமே அதிகாரப்பூர்வ என்ட்ரியாக அனுப்ப முடியும்.
அதன்படி, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு ‘கோந்தல்’ திரைப்படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கிறது. ஆனால், இந்தப் பிரிவுக்கு மற்றுமொரு இந்தியத் திரைப்படமும் சென்றிருக்கிறது.