Ramayana: “ஏன் வெறுக்கப்படும் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறீங்கனு கேட்டாங்க” – நடிகர் யாஷ்| Ramayana: “People asked me why I chose to play the character of Ravana, who is so reviled,” says actor Yash.

Spread the love

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் – தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.

ரன்வீர் கபூர்

ரன்வீர் கபூர்

அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் ரன்பீர் கபூர்,“சென்னைக்கு வணக்கம்! உங்கள் அன்பிற்கும் இந்த வரவேற்புக்கும் மிகப்பெரிய நன்றிகள். “ராமாயணா’ என்பது அன்பு, நம்பிக்கை மற்றும் நமது பண்பாட்டின் வழியே நம் அனைவரையும் ஒன்றாக பிணைக்கும் ஒரு அற்புதக் காவியம். நமது இசைமேதை ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் எனது முந்தைய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *