Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது…" – சிவகார்த்திகேயன்

Spread the love

அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

Sivakarthikeyan

நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனா, சிவகார்த்திகேயனிடம், நகை வாங்குவதில் அவரின் விருப்பம் என்னவென்று கேட்டதற்கு, “நான் எனக்காக தங்கத்தைத் தேர்வு செய்ததே இல்லை, மனைவியான ஆர்த்திதான் தேர்வு செய்வார்.

கல்யாணத்தின்போது ரிங் வாங்க மட்டும்தான் பணம் இருந்தது. அதனால் ஆர்த்திக்கு முதன்முதலில் மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். அதனை ரொமாண்டிக்காகவெல்லாம் கொடுக்கத் தெரியாது, ‘பிடிச்சிருக்கான்னு பாரு’ என வெட்கப்பட்டுக் கொடுத்தேன். இப்போது ஆர்த்தியுடன் நகைக் கடைக்குப் போயிருந்தேன்.

என் மனைவியுடன் நகைக் கடைக்குச் சென்றால், இரண்டு மணி நேரம் பார்த்துவிட்டு இறுதியில் முதலில் பார்த்த டிசைனையே தேர்ந்தெடுப்பார். அதில் பாதிக்கப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். ஒரு நாட்டினுடைய பொருளாதார மதிப்பே அதன் தங்க ரிசர்வ்ஸ் வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, தனிநபர் ஒருவருக்கும் தங்கம் மிகப்பெரிய மதிப்பையும் பாதுகாப்பையும் தருகிறது என்றுதான் நினைக்கிறேன். தங்கத்தில் முதலீடு செய்வது என்பது காலப்போக்கில் அதன் மதிப்பைக் கூட்டும் ஒரு நல்ல விஷயம்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

இதைப் பற்றி என்னைக் காட்டிலும் மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால்தான் பலரும் இதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். அது நம் வாழ்க்கைக்கு ஒரு கூடுதல் மதிப்பைத் தருவதோடு, ‘நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில் ஒரு நல்ல பொருளை வாங்கியிருக்கிறோம்’ என்கிற மனநிறைவையும் கொடுக்கிறது.

விலையுயர்ந்த கைபேசியையோ அல்லது பிற ஆடம்பரப் பொருட்களையோ வாங்குவதைக் காட்டிலும், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நமக்கும் பயன்படும்; நமக்கு அடுத்த தலைமுறைக்கும் உறுதுணையாக இருக்கும்” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *