ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல்.18) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியும், 7-வது இடத்தில் சென்னை அணியும் உள்ளன.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருத்துராஜ், “எதிரணியினர் 220 அல்லது 230 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று நினைத்தோம்.
ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்தி 30 ரன்கள் வரை குறைத்தது எங்களின் சிறந்த பந்துவீச்சுத்தான். 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.
அங்கிருந்து ஒரு சில சிறப்பான பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி, எதிரணியை அழுத்தத்தில் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதற்குப் பிறகு வந்த இரண்டு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிட்டன.