“ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா?”- உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் “நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை திறந்து காண்பிக்க வைத்திராதீர்கள் என்று எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார். தயவு செய்து அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள், காலம் தாழ்த்துகிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, “திமுக மூத்த உறுப்பினர் ஒருவர் சொன்னார் நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம் என்று… ஆனால் மிசாவையே பார்த்த திமுக இயக்கத்தை தனிப்பெரும் கட்சியாக எங்கள் தலைவர் வெற்றி பெற்று தவெக என்றால் என்னவென்று காண்பித்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் நிச்சயமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று எங்கள் முதல்வர் சொன்னார்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக என்ன ரீல்ஸ் செய்தார்கள். என்ன பாட்டுப்பாடினார்கள். பாராளுமன்றத்திலே பதவிப்பிரமாணம் செய்தபோது பெரியாரை பற்றியோ, அண்ணாவை பற்றியோ பேசவில்லை. யாரை பற்றி பேசி பதவிப்பிரமாணம் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். பேரவை நிகழ்வை ஏன் நேரலை செய்யவில்லை; பேரவை நிகழ்வை நேரலை செய்ய திமுகவிற்கு தைரியம் இல்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்று தைரியமாக நேரலையை கொடுத்தவர் எங்கள் முதல்வர்” என்று ஆதங்கமாகப் பேசினார்.