TNPL 2026: திண்டுக்கல்லை சாய்த்த கோவை; சேப்பாக்கை வீழ்த்திய திருச்சி – சூடுபிடிக்கும் பிளே ஆப் ரேஸ்! | TNPL 2026 match report of 25th and 26th match

Spread the love

TNPL 2026 தொடரின் 25-வது மற்றும் 26-வது லீக் போட்டிகள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸும் பலபரீட்சை நடத்தின.

VIDA கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்

25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த VIDA கோவை கிங்ஸ் 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

கோவை அணியின் பேட்டிங்கில் சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்களும், பாலசுப்பிரமணியம் சச்சின் 30 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாருக்கான் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் இடம்பெற்றன.

மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் திண்டுக்கல் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைத் துரத்திய திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவை கிங்ஸ் 85 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.

கோவை தரப்பில் ஜாதவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.இந்தப் போட்டியில் 18 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *