Tv update: ரன்னரான வின்னர்,வில்லங்க மாமனார்.. பாலியல் புகாரில் தலைமறவான டிவி பிரபலங்கள்! | serial actor ravichandran and biggboss muthukumaran upsconds of harasment case

Spread the love

புகாரையடுத்து ரவிச்சந்திரன் மீது சென்னை அசோக் நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறது.

முன் ஜாமினுக்கு அப்ளை செய்திருக்கும் ரவி தற்சமயம் தலைமறைவாகி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

வின்னர் இப்போது ரன்னர்!

சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த முத்துக்குமரன் யூடியூப் சேனல் ஆங்கராக இருந்து டிவிக்குள் வந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானதும் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் கருத்து சொல்வது, வீடியோ வெளியிடுவது எனப் பரபரப்பாக இயங்கி வந்தார்.

ஒருசில திரைப்பட வாய்ப்புகளும் வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் யூடியூபில் ஏற்கனவே பிரபலமாக இருந்த பெண் ஒருவர், தன்னுடன் முத்துக்குமரன் நெருங்கிப் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி ஏமாற்றியதாகவும் வீடியோ வெளியிட்டார்.

அந்தப் பெண் மீது முத்துக்குமரன் போலீசில் புகார் தர, அந்தப் பெண்ணும் போலீஸுக்குச் சென்றார். தற்போது அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிந்திருக்கின்றனர்.

எனவே தன்னை போலீஸ் கைது செய்யலாம் என எண்ணிய முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *