TVK: ‘அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று…’ – தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ | “He severely criticized Vijay then; today he praises him” – How Kadambur Raju joined tvk

Spread the love

தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக்கூறி 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார். நேரில் வந்துவிட்டாரே என விஜய்க்காக உதவியவர் எடப்பாடி பழனிசாமி.

இரவோடு இரவாக பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ”வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன்” எனச் சொன்னவர்தான் விஜய். ஆனால், இன்று அ.தி.மு.கவை விமர்சனம் செய்கிறார். விஜய்க்கு அ.தி.மு.க பல வழிகளில் உதவி செய்துள்ளது” என்று முந்தைய தேர்தல் பரப்புரை எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஜய்யுடன் கடம்பூர் ராஜூ அமர்ந்திருக்கும் புகைப்படத்தைக் காட்டிப் பேசினார்.

விஜய் நடித்த “சர்க்கார்’ படத்தில் அரசு வழங்கிய இலவசப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை மக்கள் தூக்கி எரிவது போல இடம் பெற்ற காட்சியை நீக்க வேண்டும் என கடம்பூர் ராஜூ, படக்குழுவினர் மட்டுமல்லாமல் விஜய்யையும் தொடர்பு கொண்டுப் பேசினார்.

கடம்பூர் ராஜூவின் தொடர் நெருக்கடியால்தான் அந்தக் காட்சிகள் பிளர் செய்யப்பட்டன.

விஜய்யுடன் கடம்பூர் ராஜூ

விஜய்யுடன் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து பரப்புரையில் த.வெ.கவையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வந்தார் கடம்பூர் ராஜூ. ”அ.தி.மு.க ஒரு ஆலமரம் அதனை யாராலும் சாய்க்க முடியாது. நான் அம்மாவின் உண்மைத் தொண்டன்” என்றெல்லாம் பேசிவிட்டு தற்போது த.வெ.க-வில் இணைந்துள்ளதை அ.தி.மு.கவினரே விமர்சித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *