நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். நெல்லையில் இயங்கி வரும் தனியார் குக்கர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக பிரச்னை தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வனோபி இறந்து கிடந்தாராம். அருணாச்சலத்தின் புகாரின் அடிப்படையில் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர். வனோபி கழுத்து தெரித்து கொலை செய்யப்பட்டது போலீஸாருக்கு முதல்கட்டமாக தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸார் அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தினம் தினம் சண்டை போட்டுக்கொள்வார்கள் என, அக்கம் பக்கத்தினரும் சொல்ல அருணாச்சலத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவி வனோபியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ”நான் என் மனைவி வனோபியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பார். எனது குழந்தையையும் சரிவர கவனிப்பதில்லை.