இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசை என்றழைக்கப்பட்டும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குலசையை நோக்கி படையெடுப்பார்கள். இந்த ஆண்டிற்கான தசராத் திருவிழா, கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் தினமும் ஒரு திருக்கோலத்தில் அம்பிகை முத்தாரம்மன் எழுந்தருளி வீதியுலா வருவதல் நடைபெற்றது. இந்த தசராத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவையொட்டி மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், கிருஷ்ணர், நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், மீனாட்சி, காமாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளி, ஆஞ்சநேயர் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களும் குரங்கு, கரடி, யாசகர் , குறவன், குறத்தி, நந்தி என, சுமார் 100-க்கும் மேற்பட்ட வேடமணிந்தும் கோயிலுக்கு வருவார்கள். சூரஹம்காரத்தைக் காண 9-ம் திருவிழாவான நேற்று மாலை முதலே பக்தர்கள் குலசையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.