அசின் மகள் அரின்: டிவி, போன் இன்றி 7 வயதில் 12 மொழிகள்! Actress Asin Daughter Arin: No Screens & Speaks 12 Languages

Spread the love

ராகுல் சர்மாவின் கூற்றுப்படி, அரினுக்குப் பல மொழிகளைக் கற்கும் ஆர்வம் மிக இயல்பாகவே வந்துள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமன்றி கொரியன், ஜப்பானிய, தாய், மாண்டரின் சீனம் உள்ளிட்ட சுமார் 12 உலக மொழிகளை அரினால் புரிந்துகொள்ளவும் பேசவும் முடியும்! இதைக் குறிப்பிட்ட ராகுல் சர்மா, “எனக்கு இரண்டு மொழிகளிலேயே தடுமாற்றம் வந்துவிடுகிறது; ஆனால் அரின் 12 மொழிகளை அசால்ட்டாகக் கையாள்கிறாள்” என வியப்புடன் தெரிவித்தார்.

தமிழில் கஜினி, சிவகாசி, போக்கிரி, வரலாறு என முன்னணி நடிகையாகவும், பாலிவுட்டில் கஜினி, ரெடி போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்தவருமான அசின், 2016-ல் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்த பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார்.`ஒரு அம்மாவாக தன் மகளின் இத்தனை அறிவுக்கும், முழுக் காரணமும், பெருமையும் அசினையே சாரும்’ என்கிறார் ராகுல்.

நடிகை அசின்

நடிகை அசின்

அசினும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளில் புலமை பெற்றவர். தாயின் மொழி ஆர்வமும் வாசிப்புப் பழக்கமும் மகள் அரினுக்கும் இயல்பாகக் கடத்தப்பட்டுள்ளது. இதை வைத்தே “வெளியுலகில் பெரும் தொழில் போட்டிகளை எதிர்கொள்ளும்போது, வீட்டை ஒரு சமநிலையான, ஒழுக்கமான இடமாகப் பராமரித்து, அரினின் கற்றலை நேர்த்தியாக வழிநடத்துவது அசின்தான்” என ராகுல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *