`அதிக வரன்கள் வருகின்றன; ஆனால் திருமணத்திற்கு மறுக்கிறான்’ – CJP அபிஜீத் திப்கே தாயார் சொல்வதென்ன?

Spread the love

எங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்று நான் அவனிடம் சொன்னேன். ஆனால், அவனோ சொந்தமாகச் சம்பாதிக்க விரும்புவதாகக் கூறினான்.

அவன் எவ்வளவு நேர்மையானவன் என்றால், தனது திருமணத்திற்காக ஆடைகளைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறினான். எங்களது மகன் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொரு பெற்றோரும் இதையே விரும்புவர். நானும் அதனை விரும்புகிறேன். ஆனால் இவ்விவகாரத்தில் இறுதி முடிவை அவன்தான் எடுக்கவேண்டும்.

இது குறித்து சமீபத்தில் அவனிடம் பேசவில்லை. நாங்கள் எதையும் விவாதிக்கவில்லை. அவனுக்குப் பேசுவதற்கு அதிக நேரம்கூட கிடைப்பதில்லை. நாங்கள் வீடியோ அழைப்புகள் மூலம் பேசுகிறோம். பெரும்பாலும் அவனது உடல்நலம் குறித்தே பேசுகிறோம். அவன் அரை மணி நேரம் பேசிவிட்டுத் தூங்கச் சென்றுவிடுவான்” என்று அவர் கூறினார்.

அபிஜீத்திற்கு எதாவது பெண் பார்த்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நான் யாரிடமும் பேசவில்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை. நான் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. கடந்த ஒரு மாதத்தில் இது குறித்து அவனிடம் பேசவே இல்லை” என்றும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *