அன்று 3 நிமிடத்தில் 900 பேரின் வாழ்க்கையை முடித்தவர்: இன்று அவரையே தூக்கி எறிந்த நிறுவனம்! | Vishal Garg, who laid off 900 employees via a Zoom call, has been removed as CEO of Better.com.

Spread the love

டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Finance நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த விஷால் கார்க், ஸ்டெர்ன் பிசினஸ் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு “மைரிச்அங்கிள்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2014-ல் ‘பெட்டர்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.

விஷால் கார்க்

விஷால் கார்க்

பாரம்பரிய அடமானக் கடன் முறைக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொற்றுநோய்க் காலத்தில் ரீஃபைனான்சிங் ஏற்றத்தின் போது 8 பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆனால், 2021-ல் 900 ஊழியர்களை இரக்கமின்றி நீக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பும் நிறுவனத்தின் நற்பெயரைக் கடுமையாகப் பாதித்தன.

2022-க்குப் பிறகு நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. விஷால் கார்க் தலைமையின் கீழ் நிறுவனத்தின் பங்குகள் 90%-க்கும் மேல் சரிந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *