ஆபாச மெசேஜ் விவகாரம்: “எஃப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என விடமுடியுமா?”- செல்வப்பெருந்தகை விமர்சனம்| “Can we just let Epstein and Gem Veeramani off the hook by calling them ‘pitiful’?” – Selvaperunthagai

Spread the love

மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம் எனக் கூறியிருக்கிறார். அதை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம், எப்ஸ்டீனைப் பாவம் என்று சொல்ல முடியுமா? அல்லது ஜெம் கிரானைட் வீரமணியைப் பாவம் என்று சொல்ல முடியுமா? யாரைத்தான் பாவம் என்று விட்டுவிட முடியும்? தவறு செய்தால் அது தவறுதான். அதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்தி, அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசு ஏன் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது என்பது தெரியவில்லை.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் - மாணிக்கம் தாகூர்

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் – மாணிக்கம் தாகூர்

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு இச்சம்பவம் நடந்தது என்று கூறியதாக, “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. அதில் உண்மை இருந்தால், “இதில் உண்மை இருக்கிறது” என்று அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இந்த உண்மையை எவ்வளவு நாட்களுக்குத்தான் மூடி மறைக்க முடியும்? தவறு என்றால் தவறு என்றும், சரி என்றால் சரி என்றும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பிலிருந்தும் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, இவை அனைத்தையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசின் கையில்தான் உள்ளது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *