இன்டெக்ஸ் ஃபண்டுகளே போதும் என்று நினைத்து முதலீடு செய்வதால் அதிக லாபத்தை அடைய முடியுமா? | article on Index Funds Investment

Spread the love

இந்தியாவில் நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் பலரும் முதலீடு செய்வதற்கு முக்கியமான காரணம், ரெகுலர் ஃபண்டுகளில் அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலம் முதலீடு செய்யும்போது இந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ டைரக்ட் ஃபண்டுகளைவிட 0.5% முதல் 1% வரை அதிகமாக இருப்பதுதான். கூடுதலான இந்தக் கட்டணத்தை ஏன் தரவேண்டும் என்று நினைக்கும் சில முதலீட்டாளர்கள் டைரக்ட் முறையில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வதே பெஸ்ட் என்று நினைக்கத் துவங்கிவிடுகிறார்கள்.

Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட்

Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட்

அவர்கள் இப்படி நினைக்கும்போது, சமீபத்தில் அதிக லாபம் தந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்து, அதில் முதலீடு செய்யும் தவறைச் செய்கிறார்கள். இன்னும் சிலர், யாரோ சொல்வதைக் கேட்டு அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து, எதிர்பார்த்த லாபம் வரவில்லை எனில், அடிக்கடி ஃபண்டுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் செக்ட்ரோல் ஃபண்டுகளைத் தேர்வு செய்து பெரிதாக நஷ்டம் கண்டபின் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஆனால், மிகச் சிலர் மட்டும்தான் இன்டெக்ஸ் ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இன்டெக்ஸ் ஃபண்டுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட இன்டெக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட் திட்டங்கள் ஆகும். உதாரணமாக, நிஃப்டி 50 இன்டெக்ஸ் குறியீட்டில் 50 முக்கியமான பங்குகள் உள்ளன. இந்த இன்டெக்ஸில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பங்கின் வெயிட்டேஜ்-க்குக்கேற்ப முதலீடு செய்வது ஒரு வகை. 50 பங்குகளிலும் சரிசமமாக (equal weightage) முதலீடு செய்வது இன்னொரு வகை.

இன்டெக்ஸ் ஃபண்டு வகைகளில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது பிரபலமானது. இது போல, மொத்தம் 210 வகையான இன்டெக்ஸ் ஃபண்டுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பல வகையான திட்டங்களை அறிமுகம் நடத்தி வருகின்றன.

இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகள் பேசிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படுபவை. அதாவது, இன்டெக்ஸ் குறியீடு எந்த அளவுக்கு வளர்ச்சி காண்கிறதோ, அந்த அளவுக்கான லாபம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டங்களை நிர்வாகம் செய்யும் ஃபண்ட் மேனேஜருக்கு முதலீட்டை நிர்வாகம் செய்வதில் பெரிய அளவில் வேலை இருக்காது என்பதால் இதற்கான நிர்வாகக் கட்டணம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 9% லாபமும், 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 11.5% லாபமும், 20 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 12.44% லாபம் தந்துள்ளன. இது நல்ல லாபமா என்று கேட்டால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நல்ல லாபம்தான் என்று சொல்லலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *