உலகை கலக்கும் GTA-6 கேம் … இந்தியாவின் வளர்ச்சியை ஒப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு! – Kumudam

Spread the love

இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த GTA-VI  கேம், உலகம் முழுவதும்  வெளியாகி உள்ளது. Grand Theft Auto VI என்ற, இந்த  பிரபலமான ஆன்லைன்  வீடியோ விளையாட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது தொடர்பான பரபரப்பு செய்திகளும் வெளியாகி வருகின்றன.

முதற்கட்டமாக, பிளேஸ்டேஷன் 5, எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் X மற்றும் S கன்சோலில் வெளியிடப்பட்டுள்ளது. 
கம்ப்யூட்டருக்கான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

கற்பனையாக இடம்பெற்றுள்ள நகரங்கள், கிராமப்புறங்கள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் இந்த கேமை விளையாடுபவர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. 

இதையொட்டி, சமூக வலைதளங்களில் GTA தொடர்பான போட்டோக்களும், அம்சங்களும் டிரெண்டாகி வருகிறது. நாட்டின் வளர்ச்சியை GTA கேமுடன் குறிப்பிட்டு, பிரதமர் மோடியும் GTA டிரெண்டிங்கில் இணைந்துள்ளார். 

GTA வீடியோகேமின் ஐந்தாம் பதிப்பு 2013ம் ஆண்டு வெளியானது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு, 2014 முதல் 2026 வரையில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ச்சியாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், நாட்டின் உள்கட்டமைப்புகள், கிராமப்புற வளர்ச்சி, சோலார் மின்உற்பத்தி அதிகரிப்பு, விண்வெளியில் புதிய மைல்கல், ரயில்வேத்துறையில் மேம்பாடு, ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, நக்சல்கள் ஒழிப்பு, வீட்டுக்கு வீடு கழிவறையை குறிப்பிட்டு, ஜிடிஏ போஸ்டர்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சர்வதே அளிவில் GTA- 6  விளையாட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதை காண இந்தியர்களும் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக இளைஞர்கள்  மற்றும் சிறார்கள் மத்தியிலும் இந்த விளையாட்டு தனி இடம் பெற்றுள்ளது.  

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள  GTA- 6 வெர்ஷன் இந்தியாவில் லட்சக்கணக்கணேக்கானோர் மனங்களில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த நிலையில்  இந்தியாவின் வளர்ச்சியை GTA- 6 விளையாட்டில் உள்ள பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி  பிதிவிட்டுள்ளார். 

குறிப்பாக, அதில் இ டம் பெற்றுள்ள நவீன வசதிகளை கொண்ட நகரங்கள், சாகசக் காட்சிகள் இந்தியாவின் இளம் தலைமுறையினரின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில், GTA-6 கேமில் வரும் காட்சிகளுடன் ஒப்பிட்டு, இந்தியாவின் வளர்ச்சியை, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *