எங்க ஊரே பரவாயில்ல போல! இது ரொம்ப மோசம்.. இத்தாலியில் புலம்பும் இந்தியர்கள்! | India Tourists in Rome Complain of Worse Heat Than India: ‘No AC Makes It Unbearable’

Spread the love

International

oi-Halley Karthik

ரோம்: இத்தாலி தலைநகர் ரோம் தற்போது கடும் வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு வெயில் வாட்டி வதைப்பதால், உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரோமில் நிலவும் இந்த அதீத வெப்பம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலாப் பயணிகள் சிலர், இது இந்தியாவை விட மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

India Tourists

சுற்றுலாப் பயணிகளின் குமுறல்

இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள், “இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்தாலும், அங்கு குறைந்தபட்சம் எங்களிடம் ஏசி வசதியாவது இருக்கிறது. ஆனால் இங்குள்ள பல இடங்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் போதிய குளிர்சாதன வசதி இல்லை. இதனால் வெயில் ரொம்பவே வாட்டி வதைக்கிறது. இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம்” என்று புலம்ப தொடங்கியிருக்கின்றனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

ரோம் உட்பட இத்தாலியின் பல நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பல நகரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் நண்பகல் நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் தற்போது நிலவி வரும் இந்த அதீத வெப்பம், பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெயிலின் கொடுமையால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான கொலோசியம் போன்ற இடங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவை விட ஏன் மோசம்?

இந்தியாவில் இருப்பதை போல இத்தாலியில் கட்டிடங்கள் இருக்காது. நம்மூர் ராஜாக்களின் கோட்டை மாதிரி கருங்கல்லை வைத்து வீடுகள் கட்டப்பட்டிருக்கும். பெரும்பாலான வீடுகள் 80-100 வரை பழமையானதாக இருக்கும். இப்படிப்பட்ட வீடுகளின் சுவற்றில் ஓட்டை போட்டு ஏசி மாட்டுவது எல்லாம் நடக்காத காரியம்.

ஏசி கிடையாது

மட்டுமல்லாது நம்மூர் மக்கள் பாம்பை பார்த்து பயப்படுவதை போல.. அந்த ஊர் மக்கள் ஏசி காற்றை பார்த்து பயப்படுவார்கள். ஜில்லுனு காற்று முகத்தில் நேராக படக்கூடாதாம். அப்படி பட்டால்.. இல்லாத நோயெல்லாம் வந்துடுமாம். இதுபோக இத்தாலியில் கரண்ட் பில் அதிகம். இதையெல்லாம் மீறி அந்த ஊர் மக்கள் ஏசி வாங்கி மாட்டினாலும்.. 25 டிகிரிக்கு கீழே ஏசியை குறைக்க கூடாது. அந்த நாட்டின் சட்டம் அப்படி.

எனவே இத்தாலியில் 30-50% வீடுகளில் மட்டும்தான் ஏசி இருக்கும். ஓட்டல்களில் கூட ஏசி இருக்காது. ரொம்பவும் காஸ்ட்லியான ஓட்டல்களில்தான் ஏசி இருக்கும். இதனால்தான் சுற்றுலா போன இந்தியர்கள் புலம்புகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *