என்னது சாலை போராடுவதற்கான இடமில்லையா?… சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு..! – Kumudam

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர் பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறை குண்டுகட்டாக கைது செய்தது. இதற்கு திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மாணவர்கள் கைது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்விகள் எழுப்ப்பட்ட்து. அப்போது பேசிய அவர், “நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று மாணவர்கள் அறவழியில் போராடினால் பிரச்சனை இல்லை. திடீரென தூண்டுதல் காரணமாக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார். 

மேலும், ”தூண்டுதலின் பெயரிலோ, மக்களுக்கு இடையூறு செய்தால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வு ரத்து தான் தவெகவின் நிலைப்பாடு. நீட் சீரமைப்பு என்பது தவெகவுக்கு ஏற்புடையது அல்ல. ஒரு போராட்டத்தின் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். டெல்லியில் ராகுல் காந்தியை ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டு கைது செய்திருக்கிறார்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சாலை என்பது போராடுவதற்கான இடமல்ல என்று கூறியதோடு, யாருடைய தூண்டுதலின் பேரில்தான் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று மாணவர்களின் போராட்ட்த்தை கொச்சைப்படுத்தும்விதமாக அமைச்சர் பேசுகிறார் என்றும், மாணவர்களுடன் தவெக அரசு நிற்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து போராட்ட உணர்வை இழிவுப்படுத்தாதீர்கள் என்றும், டெல்லியில் சாலை இறங்கி போராட பாஜக அரசே அனுமதித்துள்ளது ஆனால் தவெக அரசு சாலையில் போராடக் கூடாது என்கிறது என்று தவெக அரசுமீதும் அமைச்சர் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *