'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' – தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

Spread the love

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் இந்த பாலத்தை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், நடந்து செல்பவர்களுக்காக பாலத்தின் இருபுறமும் மூன்றடி அகலத்தில் நடைபாதையும் உள்ளது. இந்த நடைபாதையில், காலை/ மாலை என இரு வேளையிலும் நடைபயிற்சிக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

aapaasa seyal

நடைபாதையாக சமயபுரத்திற்கு செல்பவர்களும் இந்த கொள்ளிடம் பாலத்தின் நடைபாதையை கடந்து தான் செல்கிறார்கள். கொள்ளிடம் பாலத்தின் 22 தூண்களில் 12 தூண்கள் புறநகர் பகுதியாகும். மீதமுள்ள 12 தூண்கள் மாநகர் பகுதியாகும் உள்ளது. இந்த நிலையில், நடைபாதையில் கல்லூரி மாணவ/ மாணவிகள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிலர் பட்டப்பகலிலேயே நடைபாதையில் அருவருக்கத் தக்க வகையில் அத்துமீறலில் ஈடுப்பட்டு, ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள்.

இதனால், நடைபாதையில் செல்லும் வயதானவர்கள், பெண்கள் குடும்பத்துடன் செல்லும் பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் அநாகரிய செயலில் ஜோடிகள் ஈடுபடுவது அதிகமாக நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் பாலத்தின் நடைபாதையை ஒரு சிலரின் அத்துமீறிய செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி, சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.

aapasa seyal

\இரவு நேரங்களில் கொள்ளிடம் பாலத்தில் நடைபாதையில் கல்லூரி மாணவ /மாணவர்கள், பெண்கள் /ஆண்கள் என சிலர் அநாகரிகமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பட்டப் பகலிலேயே இது போன்று நடைபெறுவது அதிகமாகி வருகிறது. கொள்ளிடம் பாலத்தை பொறுத்தவரை 12 தூண்கள் மாவட்ட காவல் துறை எல்லைக்கு உட்பட்டு உள்ளது. மீதமுள்ள 12 தூண்கள் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டு உள்ளதால் இந்த கொள்ளிடம் பாலத்தை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால், பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *