எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?
சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது:
கோழிக்கறி
கடல் நண்டு
செம்மறி ஆட்டிறைச்சி
மாட்டிறைச்சி
ஊர்ப்பன்றி
சிலவகை மீன் வகைகள் (இறால், கருவாவல், உழுவை, வாளை, கெளுத்தி மீன், நெய் தோலி)
இவை உடலில் வெப்பம், அழற்சி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் என்பதால், பத்திய காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

‘இந்த’ இறைச்சிகளைச் சாப்பிடலாம்!
பத்திய காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஒவ்வாமை ஏற்படுத்தாத இறைச்சி வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அவை…
வெள்ளாட்டுக்கறி (மெலிந்த பகுதி)
கருங்கோழி
காணாங்கோழி
காடை
கௌதாரி
சிறிய வகை மீன்கள் (நெத்திலி, சுதும்பு, வெள்ளைவாவல், பேராரால், சன்னக்கூனி, விரால், அயிரை மீன்)
இவற்றை கறியாக அல்லாமல் சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.