2017 ஜனவரி 23-ஆம் தேதி, ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரத்தின் போது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைக்கப்பட்டதில், தன் மகளின் வழக்கு ஆவணங்கள் எரிந்துவிட்டதாகப் போலீசார் கூறியதாகவும், வசதியின்மை காரணமாகத் தன்னால் சட்டப் போராட்டம் நடத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும், தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், வீரமணியின் இச்சைக்கு உடன்படாத சிறுமிகளை அவர் கொலை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுவைப் பரிசீலித்த காவல் ஆணையர் அமல்ராஜ், நீதிமன்றத்தை அணுகி பழைய வழக்கு விவரங்களைப் பெற்று தீவிர விசாரணை நடத்துமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் குற்றத்தை மறைக்க உதவிய காவல்துறையினர் யார் யார் எனப் பட்டியலிட்டு விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.