`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?’ – சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

Spread the love

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்.

இந்தியாவில் இந்த புள்ளி விபரங்களைத் தந்து வருவது “பார்க்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘ப்ராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்’ அமைப்புதான். இதன் தலைமையகம் மும்பையில் செயல்படுகிறது. இது அரசு அமைப்பு அல்ல. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எப்படியோ அது போல இந்த அமைப்பும் தனியார் அமைப்புதான். ஆனால் இந்தியாவில் உள்ள பெரிய மீடியா நிறுவனங்கள் அத்தனையும் இதன் உறுப்பினர்களாக அங்கம் வகித்து வருகின்றன.

இந்த பார்க் அமைப்பு வெளியிடும் ரேட்டிங் அடிப்படையில்தான் சேனல்களுக்கு விளம்பர வருமானங்கள் வருகின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டி.ஆர்.பி ரேட்டிங் வெளி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆடியன்ஸ் ரிசர்ச் துறையில் ‘பார்க்’ அமைப்பின் ஏகபோகம் குறித்து பல மட்டங்களில் இருந்து கேள்விகள் எழ, இந்த விவகாரத்தில் தலையிட்டது மத்திய அரசு.

அதன்படி இந்தாண்டு தொடக்கத்தில் ‘தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கை 2026’ ஐ அறிமுகப்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *