“டெல்லி அணி, தமிழ்நாடு அணிக்கான போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின் – udhayanithi stalin campaign at karur

Spread the love

அப்போது பேசிய அவர்,

“கரூர் மாவட்டத்தில் கடந்த முறை தேர்தலில் நான்குக்கு நான்கு தொகுதிகள் தி.மு.க வெற்றி பெற்றது. இம்முறையும் தி.மு.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடியே 35 லட்சம் மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனை தேர்தலைக் காரணம் காட்டி நிறுத்துவதற்கு சதி செய்து வந்தனர். இதனை அறிந்த தமிழக முதல்வர் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை மற்றும் கோடைகால சிறப்பு நிதி ரூபாய் 2000 என 5000 வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தினார். இந்தத் தேர்தலில் தி.மு.க அளித்துள்ள வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும், காலை உணவுத் திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்பதை எட்டாம் வகுப்பு வரை பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தபடும் என தி.மு.க வாக்குறுதி அளித்துள்ளது. மகளிர் பயன்பெறும் வகையில் ரூ. 8000 கூப்பன் வழங்கும் திட்டம் மூலம் நீங்களே விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக தி.மு.க தலைவர் பதவியேற்பது உறுதியாகிவிட்டது” என்றார்.

udhayanithi stalin

udhayanithi stalin
d.dixith

அப்போது, கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் இருந்த வாகனத்திற்கு தொண்டர்கள் புதிய பேனர் புகைப்படத்தை அனுப்பினர். அந்த புகைப்படத்தில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற படத்தை காண்பித்த உதயநிதி ஸ்டாலின், “இதைவிட வேறொரு படம் என்னிடம் உள்ளது” என்று சசிகலாவின் காலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கீழே படுத்து ஆசிபெரும் படத்தினை காண்பித்தார். அதோடு, “அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி ஒன்னாம் நம்பர் முரட்டு அடிமை என்பதற்கு இந்த புகைப்படம் உதாரணம். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து ஒரு அணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறார். நாம் தமிழ்நாடு அணி. எனவே, தமிழ்நாடு அணி தான் வெற்றி பெற வேண்டும். டெல்லியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க தலைமையிலான அணி தமிழகத்தில் நுழைய விடாதவாறு தடுக்க நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைவரும் மக்களை சந்தித்து ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்யப் போகும் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, குளித்தலை தி.மு.க வேட்பாளர் சூரியனூர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் தி.மு.க வேட்பாளர் சி.கே.ராஜா ஆகிய இருவரையும் ஆதரித்து கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அங்கு பேசிய அவர், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் பிரசாரம் செய்த போது காட்டிய அதே புகைப்படத்தை காண்பித்து, “இந்த புகைப்படம் உலகப் புகழ்பெற்றதற்கு யார் காரணம், நீங்கள் தான் காரணம் நான் அல்ல. இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர ஆசைப்படுகிறார். அவர் அமைத்திருக்கும் டெல்லி கூட்டணி தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டியது அனைத்து வாக்காளர்களின் கடமை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *