இந்தச் சட்டத்தின் படி, இன்று முதல் இந்தியா, சீனா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளது.
சீனா, இஸ்ரேல், ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் 12.5 சதவிகித வரியை சந்திக்கும்… இந்தியா, இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் 10 சதவிகித வரியை சந்திக்கும்.
இதில் 12.5 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் கட்டாய உழைப்பைத் தடுப்பதற்கான எந்தச் சட்டமும் இல்லை.

ஆனால், 10 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு இறக்குமதித் தடைகளை விதித்துள்ளன… இந்த நாடுகள் இத்தகைய தடைகளைத் திறம்பட அமல்படுத்துவதை மேலும் ஊக்குவிக்க 10 சதவிகித வரி என்று வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவிற்கு நல்லதா… கெட்டதா?
பிப்ரவரி மாதம் தற்காலிகமாக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த வரி 12.5 சதவிகிதம். ஆனால், இப்போது 10 சதவிகிதம் தான். இப்படி ஒப்பிட்டு பார்க்கையில், முன்பு இருந்ததை விட, இப்போது இந்தியா மீதான வரி குறைந்திருக்கிறது.