‘தடைகள் நீங்க விஸ்வரூப தரிசனம்…30 ஆம் தேதி முக்கிய மீட்டிங்?’ – ரிசல்ட்டுக்குத் தயாராகும் விஜய்! |“Vijay Visits Tiruchendur for Viswaroopa Darshan; Key Meeting on April 30 Sparks Buzz Ahead of Results!”

Spread the love

இந்நிலையில்தான் சூழ்ந்திருக்கும் தடைகள் எல்லாம் விலகவும் எதிரிகளின் சூழ்ச்சிகள் உடைபடவும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யுமாறு விஜய்யிடம் அவரின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதாகக் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து ஆனந்த் நேற்று மதியமே திருச்செந்தூருக்குச் சென்று விஜய்யின் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

விஜய் நள்ளிரவு 11:30 மணிக்கு மேல் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்பி தனி விமானம் மூலம் நள்ளிரவு 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்திருக்கிறார். அங்கிருந்து காவல்துறை பாதுகாப்போடு திருச்செந்தூர் முருகர் கோவிலுக்குச் சென்றவர், சிறப்பு தரிசனத்தை முடித்துவிட்டு செண்டிமெண்ட்டாக ஒன்றிரண்டு மணி நேரங்களுக்கு திருச்செந்தூரிலேயே தங்கிவிட்டு மீண்டும் சென்னை கிளம்பியிருக்கிறார்.

‘தலைவரைப் பார்க்க லோக்கல் மாவட்டச் செயலாளர்களோ நிர்வாகிகளோ கோவிலுக்கு வரக்கூடாது’ எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறார் ஆனந்த். ஆனால், கோவிலுக்குள் விஜய் செல்கையில் ஆனந்துக்கு நெருக்கமான மா.செக்கள் சிலர் உடனிருந்ததால் மற்ற நிர்வாகிகளெல்லாம் கடும் அப்செட். ‘தளபதி பிரஷர் எதுவும் இல்லாம ப்ரீயா நம்ம ஊருக்கு வராரு. அப்பக்கூட நம்மல நெருங்கவிட மாட்றாங்களே’ என வருந்துகின்றனர்.

மேலும், ஜோதிடரின் அறிவுத்தல்படி ரிசல்ட்டுக்கு முன்பாக விஜய் வேறு சில ஆன்மிகத்தலங்களுக்கும் சென்று வழிபடக்கூடும் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *