தமிழ்நாடு மழை எச்சரிக்கை: 5 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை|Tamil Nadu Rain Alert: Which Districts Have School Holidays Today?

Spread the love

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழையோடு, சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் இன்று (அக்டோபர் 22) காலை விடிந்திருக்கிறது.

சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,

இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

நேற்று மதியம் 2.55 மணிக்குக் கொடுத்த அப்டேட்டின்படி,

இன்று…

மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம்.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், புதுச்சேரி.

மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை.

ஆக, இன்று தமிழ்நாடு முழுவதுமே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மழையின் அளவு மட்டுமே மாறுபடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *