“சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், “என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விளக்கத்தை ஏற்காத தவெக அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அமைச்சர் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!