திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: விஜய் அரசை விமர்சித்த அண்ணாமலை|’Historic Blunder’: Annamalai’s Sharp Attack on Vijay Govt

Spread the love

நேற்று திருப்பரக்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து “We The Leaders’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன.

நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாகச் செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.

தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளைத் துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு.

நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.

ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றைக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *