திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தையொட்டி ரஜினி கோவிலில் 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு செய்த ரசிகர்!

Spread the love

​தொடர்ந்து, ரஜினி சிலைக்கு முன்பாக அவரது ‘கூலி’ படத்தின் புகைப்படத்தோடு, தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கட்டிங் பிளேடு, திருப்புலி, நட்டு, போல்டு உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு “உழைப்பாளர் தினம்” என்ற எழுத்து வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகரான கார்த்திக் பேசியபோது, நாங்கள் ஐந்தாவது ஆண்டாக மே தினத்தை ரஜினி கோயிலில் கொண்டாடுகிறோம். உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்பேனர், போல்ட் மற்றும் நட் போன்ற இரும்பு கருவிகளைக் கொண்டே ‘உழைப்பாளர் தினம்’ என்ற எழுத்து வடிவிலான அலங்காரத்தை இந்த ஆண்டு கோவிலில் அமைத்துள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் மேலோங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *