திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; வருத்தத்துடன் காணப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் | kallakurichi mla arul vignesh made a sudden visit to the tiruvannamalai temple

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க – அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோருவது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நேற்று இரவு திடீரென சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவர் சோகமாகக் காணப்பட்டார்.

செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும்போது, அவருடன் வந்திருந்தவர்கள் `வீடியோ எடுக்க வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, வேக வேகமாகச் சென்று வேண்டிக்கொண்ட பிறகு புறப்பட்டுச் சென்றார் அருள் விக்னேஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *