பணம் விஷயத்தில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருப்பது எப்படி? | பணம் வளர்ப்போம்

Spread the love

குழந்தைகளின் எதிர்காலத்தின் நிதி திட்டமிடலை நாம் மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதாது. எதிர்காலத்தைச் சிக்கல் இல்லாமல் கழிக்க நிதி திட்டமிடலை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எளிதாக எப்படி நிதி திட்டமிடலைச் சொல்லித் தருவது என்பதை கூறுகிறார் நிதி நிபுணர் முனைவர் A.V செந்தில்.

“குழந்தைகளுக்கு நிதி திட்டமிடலைச் சொல்லி தருவதற்கான கோல்டன் ரூலே – நிதி திட்டமிடலில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

A.V செந்தில்
A.V செந்தில்

அடுத்த முக்கியமான பாயிண்ட் – Theory ஆக இல்லாமல், Practical ஆக நிதி திட்டமிடலை குழந்தைகளுக்குச் சொல்லி தருவதுதான் வர்க் அவுட் ஆகும்.

தியரியைப் பின்பற்றினால், குழந்தைகளுக்குப் போர் அடித்துவிடும். பிறகு, அவர்கள் நிதி திட்டமிடலைப் பெரிதாகவே கருதமாட்டார்கள்.

குழந்தைகளின் 5 – 10 வயதுகளில், பாட்டி, தாத்தா பிறந்த நாள், ஃபிரண்ட்ஸ் பிறந்த நாள்களின் போது, சூப்பர் மார்க்கெட் அல்லது ஸ்டேஷனரிக்கு அழைத்துச் சென்று ரூ.100 – 500 பட்ஜெட்டைச் சொல்லி, அதற்குள் அவர்களுக்கும், பாட்டிக்கோ, தாத்தாவிற்கோ, ஃபிரண்ட்ஸிற்கோ கிஃப்ட் வாங்கச் சொல்லுங்கள்.

அப்போது, அவர்கள் எத்தனை ரூபாய்க்குள் வாங்கினால் சரியாக இருக்கும் என்கிற கூட்டல், கழித்தல் தெரிய வரும்.

10 – 13 வயதுகளில், உண்டியல் வாங்கிக் கொடுத்து, முதலாம் ஆண்டு தினமும் ரூ.10-ஐ உண்டியலில் சேர்த்து வரச் சொல்லுங்கள். அடுத்த ஆண்டு ரூ.20, அதற்கடுத்த ஆண்டு ரூ.30…. என்று சேர்த்து வரச் சொல்லி, ஒவ்வொரு மாதம், ஆண்டின் கடைசியிலும் சேர்த்து வைத்த தொகையைக் கணக்கு பார்க்க சொல்லுங்கள்.

இது அவர்களுக்குப் பெருக்கல் மற்றும் காம்பவுண்டிங்கைச் சொல்லித் தரும்.

சேமிப்பு
சேமிப்பு

13 வயது ஆனதும், மைனர் வங்கிக் கணக்கைத் தொடங்கி ஒன்றாம் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி நடைமுறைகளைக் கற்றுத் தாருங்கள்.

15 – 16 வயதுகளில் தீபாவளி, பொங்கலுக்கு வரும் பணத்தை இக்விட்டி ஃபண்ட், டெப்ட் ஃபண்ட் என மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

இதைச் செய்தாலே, 18 வயதின்போது, அவர்களுக்கு சேமிப்பு, முதலீடு குறித்த ஐடியா வந்துவிடும். இதன் பிறகு, அவர்கள் நிதி திட்டமிடலைப் பக்காவாகச் செய்ய தொடங்கிவிடுவார்கள்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *