ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது – ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை! | daughter arrested for killing mother over jewelry in ranipet

Spread the love

இதனிடையே, கீதாவின் கொலையில் அவரது மூத்த மகள் சரண்யாவுக்குத் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தாயை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். கீதாவிடம் சொந்தமாக 30 பவுன் நகைகள் இருக்கின்றன. அந்த நகைகளை தனது சொந்த தேவைக்காக அடகு வைப்பதற்காக தருமாறு தாய் கீதாவிடம் சரண்யா கேட்டுவந்திருக்கிறார். நகைகளை தாய் கீதா தர மறுத்ததால், சரண்யா ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.

மகள் சரண்யா

மகள் சரண்யா

சம்பவத்தன்று தாய் கீதாவிடம் கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்துக்குமேல் தாய் என்றும் பார்ககாமல், கீதாவை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் மகள் சரண்யா. இதைத்தொடர்ந்து, வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார் சரண்யா. தாய் கீதா கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைத்தவுடன் எதுவும் தெரியாததுபோல வீட்டுக்கு வந்து தாயின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதை போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.

சரண்யாவை கைது செய்திருக்கும் போலீஸார், அவருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஆண் நண்பரையும் பிடித்து அவருக்கும் கொலையில் தொடர்பிருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *