ராவணன் குடிலிலேயே கைவைத்த தவெக… உச்சக்கட்ட கோபத்தில் அண்ணன்..! – Kumudam

Spread the love

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு திமுக கூட்டணி கட்சிகளை வளைத்து திமுகவை தனித்துவிட்ட்தோடு, அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து அதிமுக கூடாரமே தற்போது காலி செய்துக் கொண்டிருக்கிறது என்று தவெக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பனையூரில் சனிக்கிழமை சம்பிரதாயமாக இணைந்து வருகின்றனர்.  

இந்த நிலையில், என் தம்பிடா… நான் அண்ணன் டா என்று முதலமைச்சர் விஜய் பாசம் மழை பொழிந்து வந்த அண்ணன் சீமானின் கூடாரத்திலேயெ கைவைக்கத் தொடங்கியுள்ளது தவெக என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

தேர்தலுக்கு பிறகு எந்தவித பிரஸ்மீட்டும் கொடுக்காமல் சைலண்ட் மோடிலேயே இருந்து வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் முக்கிய பிரச்னைகளுக்கு அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தேர்தல் தோல்விக்கு பிறகு சீமான் மனம் உடைந்து போய்விட்டதாகவும், இனி என்ன பேசி என்ன பிரயோஜனம்? இனி நாமலும் ட்விட்டர் மற்றும் சோஷியல் மீடியா அரசியலையே செய்வோம் என்று விஜய்யின் பாணியை கடைபிடிக்க முடிவெடுத்ததாகவும் ராவணன் குடில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், எங்க அண்ணனுக்கு ஒரே நிம்மதி என்னவென்றால் தம்பிகள் யாரும் பனையூருக்கு படையெடுக்காமல் இருப்பதே என்று கூறிய நாதகவினர், தற்போது அதுவும் பொய்த்து போகத் தொடங்கியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 

அதாவது, நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இதனால் ராவணன் குடிலே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழக்கறிஞரான இவர், 2016 மற்றும் 2026 தேர்தல்களில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். தன்னுடைய வழக்கறிஞரே தனக்கு துரோகம் இழைத்துவிட்ட்தாகவும், இனி எதற்குடா கட்சிய நடத்திக்கிட்டு என்று மனவிரக்தியில் அண்ணன் சீமான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், விரைவிலேயே நாதகவை சேர்ந்த தம்பிகள் பனையூருக்கு கொத்து கொத்தாக படையெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ராவணன் குடில் காலியாகுமா? இல்லையா? என்பது இனி வரும் சனிக்கிழமைகளில் தெரிந்துவிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *