“விஜய் சார் கூட சேர்ந்து நடனமாடின மொமண்ட்!” – ‘ஜனநாயகன்’ அனுபவங்களை பகிர்ந்த மோனிஷா ப்ளசி | “Acting With Vijay Sir Is A Big Blessing” – Monisha Blessy On Jananayagan

Spread the love

நம்மிடையே பேசியவர், “‘டாப் குக் டுப் குக்’ நிகழ்ச்சியில் இருந்தபோதுதான் இந்தப் படத்திற்காக போனில் என்னை அழைத்திருந்தார்கள்.

அப்போது, ‘விஜய் சாரின் கடைசிப் படத்தில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்’ என்று உதவி இயக்குநர் சொன்னபோது, யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.

ஆனால், அது நிஜமென பிறகுதான் தெரிந்தது. இயக்குநர் அ. வினோத் சார் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைப் பார்ப்பார்; அதன் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று உதவி இயக்குநர் மூலம் தெரிந்துகொண்டேன்.

Monisha Blessy  - Jana Nayagan

Monisha Blessy – Jana Nayagan

அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பின் போது வினோத் சார் என்னிடம் வந்து, ‘ஷோ ஷூட் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?’ என விசாரித்தது எனக்குப் பெரிய ஆச்சரியத்தையும் கொடுத்தது.

வினோத் சார் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஒரு காட்சியில் மமிதா பைஜுவைப் பின்னால் அமரவைத்து நான் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும். நான் மிகவும் மெதுவாக ஸ்கூட்டியை ஓட்டினேன்.

அதைப் பார்த்த வினோத் சார் மைக்கில், ‘மோனிஷா, படம் முடிஞ்சிடும்மா… இவ்வளவு ஸ்லோவா வேண்டாம்’ என்று நகைச்சுவையாகக் கிண்டல் பண்ணினார்” என்றவர், விஜய்யுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *