International
oi-Nantha Kumar R
உகாண்டா: கடந்த 15 ஆண்டுகளாக 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்று மொத்த நாட்டையும் அலறவிட்டு தலைமைறைவாகி வந்த கொடூர கொலைக்காரனை உகாண்டா பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் மனித மாமிசம் உண்ணும் இந்த கொடூர கொலைக்காரன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக உகாண்டா நாட்டின் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா கூறுகையில், ”நம் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாதுகாப்பு படையினர் முஜிரிசி மோசஸ் என்ற கொடிய கொலைகார நபரை கைது செய்துள்ளனர். இவன் உகாண்டா வரலாற்றிலயே மிக மோசமான சீரியல் கில்லர் என்பதோடு, மனித மாமிசம் உண்பவன்.
2010 ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை மசகா, இபாண்டா, காசோ உள்ளிட்ட இடங்களில் இவன் மொத்தம் 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்றுள்ளான். பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவனுக்கு நிச்சயம் மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்று கூறியுள்ளார். இதனால் உகாண்டா மக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.