யார் இந்த மானவ்?
100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட டெல்லியை சேர்ந்த வணிகக் குழுமமான சர்தானா குடும்பத்தைச் சேர்ந்த மானவ் சர்தானா ஒரு தொழிலதிபர் ஆவார். 1969-ல் மானவின் தந்தை எஸ்.பி. சர்தானா மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோரால் இணைந்து வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் இம்பீரியல் ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது இந்த இம்பீரியல் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் மானவ் சர்தானா தனியார் பங்கு வர்த்தக நிறுவனமான வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தை இம்பீரியல் ஆட்டோ நிறுவனம் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது தொடர்ந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் மானவ், இம்பீரியல் ஆட்டோ குழுமத்துடன் தொடர்புடைய பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

இவற்றில் இம்பீரியல் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட், க்ரூஸ் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இம்பீரியல் மார்டோர் என்ஜின் ட்யூப்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
கொரானா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் ஆடம்பர வீடுகளுக்கான தேவை வலுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குருகிராம் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில், வசதி படைத்த வாடிக்கையாளர்கள் பரந்த மற்றும் தனித்துவமான வீடுகளை அதிகம் விரும்புவதால், அதிக மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ‘பென்ட்ஹவுஸ்’ (penthouse) விற்பனை பெருமளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான DLF, 352 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 185-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிற்து.